About Me

My photo
In short, i am intelligent, but i dont work hard to learn things.. I work out things only when necessary.

Sunday, June 12, 2016

சென்னை புத்தக கண்காட்சி நாளை முடிகிறது.

கடந்த பத்து நாட்களாக சென்னை தீவுதிடலில் நடந்து வரும் புத்தக கண்காட்சி நாளையுடன் முடிவடைகிறது.

இதுவரை புத்தகங்கள் வாங்க பிரியப்பட்டு சிலபல காரணங்களுக்காக தள்ளி போட்டவர்கள், இனியும் தள்ளி போடவேண்டாம். நாளையும் நீங்கள் வாங்க தவறவிட்டால், இனி அடுத்த வருடம் தான் இது போல் மீண்டும் ஒரு வாய்ப்பு கிட்டும்.

சரி எதுக்கு புத்தகம் படிக்க வேண்டும் என கேட்குறீங்களா ?

சுருக்கமான பதில், அறிவை வளர்த்து கொள்ள. கொஞ்சம் விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால் நமக்கு ஒரு தகவல் வேண்டும் என்கிற பொழுது பெரும்பாலான நேரங்களில் நாம் புத்திசாலி என்று ஒரு பட்டியல் வைத்து இருப்போம். அதில் உள்ள நபர்களிடம்  கேட்டு தெரிந்து கொள்கிறோம். அந்த புத்திசாலி பட்டியலில் உள்ள நபர்களுக்கு எப்படி எல்லாம் தெரிகிறது என்று ஆராய்ந்தால், அவர்கள் அந்த தகவலை சொந்த அனுபவம் மூலமாகவோ, செவிவழியாகவோ, எங்காவதோ படித்து தெரிந்து வைத்து இருப்பார்கள். அந்த அறிவு ஒரு நாள் ரெண்டு நாளில் அவர்கள் பெற்றது அல்ல, தொடர் சங்கிலி மாதிரி, பல விசயங்களை படித்து ஒன்றுக்கொன்று ரீலேட் பண்ணி சகலமான அறிவை வளர்த்து இருப்பார்கள். நாம் எப்பவும் நமக்கான முடிவை அடுத்தவரை எடுக்க சொல்லி கேட்பது தவறு, நம் தேவை நமக்கு மட்டும் தான் தெரியும். முதலில் அடுத்தவரிடம் எதுக்கு செல்கிறோம் என்றால் நம் அறிவு மேல் நமக்கு நம்பிக்கை இல்லாததே காரணம். அந்த நம்பிக்கையை பெருக்கி கொள்ள நம் சிந்தனை திறனை வளர்த்து கொள்ள வேண்டும். அதற்கு நிறைய விஷயங்கள் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு நாம் நிறைய படிக்க வேண்டும்.

முதலில் உங்களுக்கு எதில் அதிக நாட்டம்  உள்ளதோ அது சம்பந்தமான புத்தகங்களை வாங்கி படியுங்கள். படிப்பில் ஆர்வம் வளரும் வரும் வரை உங்களுக்கு ஈடுபாடு அதிகம் உள்ள தலைப்பில் மட்டுமே புத்தகங்கள் வாங்கி படியுங்கள். என்றைக்கு புத்தகம் படிப்பது சுமையாக அல்லாமல், மகிழ்ச்சியா தோன்றுகிறதோ அன்று உங்களுக்கு படிப்பில் ஆர்வம் வந்துவிட்டது என்று பொருள்.

ஆர்வம் வந்த பின் என்ன புத்தகங்கள் படிக்கலாம் என்பதை அடுத்த பதிவில் சொல்கிறேன்.



 

Saturday, June 4, 2016

மீண்டும் நான்

கோமா நிலையில் இருந்த இந்த தளத்துக்கு மீண்டும் உயிர் கொடுக்க உள்ளேன்.

இன்று முதல் தினமும் சில மணித்துளிகள் செலவு செய்து உங்கள் சிந்தனையை தூண்டும் விதமாக பதிவுகள் அல்லது கதைகள் எழுத உள்ளேன் !!!

இனி பதிவுகள் வாயிலாக உரையாடலாம்.

-- அருண்பால் ஸ்ரீனிவாசன்